சொக்கித் தான் போனேன்,நான்..
ஏன்!
அந்த மன்மதன் கூட
மயங்கி தான் போவான்..!
மழலையின்
சிரிப்பு அம்பில்..!

துலாபாரத்தில்,
குபேரனின் செல்வங்கள்
கூட தோல்வியுறும்..!
அந்த பொக்கை வாய்
இடுக்கில் பொதிந்த
நவரத்தினப் பல் சிரிப்புக்கு..!

உலக அழகிகள்
அனைவரும்
சேர்ந்து,அலங்கரித்து உலா வந்தாலும்...
அந்த
திக்குமுக்காடும்
பிஞ்சு கால்
நடனத்திற்கு முன் ,
தோற்று தான் போவார்கள்..!!!
பிரம்மன் உலகத்திற்கு வர,
அஞ்சுவாராம்...
ஏனெனில்,
அந்த பூப்பாதம் தொட்டு
விளையாடி,
படைக்கும் தொழிலை மறக்கும் அய்யத்தில்..!!!
தில்லை அம்பல நடராஜனின்சிற்பத்தை தான் செதுக்கியதோ,
அந்த பிஞ்சு விரல்..?
கோவை கனி அளவு
இத்துனை நிறம் மாறி,
சிவந்து காய்க்க..
இல்லை ..! இல்லை..!
அதன் சிற்ப உதடுகளால்,
விரல் சுப்பியதன் தாக்கமாம்..!
பார்கடல் படுக்கை வெய்த்திருக்கும்,அனந்த பெருமாள் கூட,
சுகமாய் துயில் கொண்டாரா..?
யான் அறியேன்..!
ஆனால் ,
இந்த குழந்தையின்
உறக்கத்தின்அமைதி..
ஜெகத்தைக் கொடுத்தாலும் ஈடாகா..!









No comments:
Post a Comment