Tuesday, October 22, 2013

காதலன் விடும் தூது..!!!!!








என் மனம் கவர்ந்த தேவதைக்கு,


பூக்கள் பூப்பது ,
வாழ்வதற்கு அன்றோ..!
வானம் இருள்வது,
நிலவுக்கன்றோ..!
சூரியன் உதிப்பது,
பூமிக்கன்றோ..!
மேகம் கருப்பது,
                மழைக்கன்றோ..!
சகியே!
நான் இருப்பது,
உனக்கன்றோ..!
நீ இருப்பது,
என் மனதில் அன்றோ..!
சொல்லடி பெண்ணே!
உன் கருவிழி பார்வையில்,          
என்னை பார்ப்பது
மழலைப் பார்வையா.?
இல்லை,
நான் தான் மழலையா.?
மலரே!
நீ தலை குனிவது,
உன் இதயத்தை பறிகொடுத்த வெட்கத்திலா.?
இல்லை,என் இதயத்தை சிறை எடுத்த களிப்பிலா.?

என்னை பார்த்து,
நீ வெட்கத்தில் புன்னகைக்க,
என் ஜீவனே சிவக்குதடி.!
மறுமுறை நீ வீசிய 
மின்னல் பார்வையில்,
என் இதயம் நொறுங்குதடி.!
உறைந்தேன் ! நின்ற இடத்திலே!
ஆகா ,பெண்ணே!
 நீ தலைகுனிந்தது,
நம் மனப்போரில்,எனை வீழ்த்தவா.?
என்றெனில்,
பேதையே!
உன்னை முதல்முறை பார்த்த கணமே,
நான் நிராயுதபாணி ஆனேன்.!
இதை அறிந்தும்,
ஏன் மனப்போர் விடுக்கிறாய்..?

உயிரே!
உன்னை பார்த்த அன்றே,
நான் சரணடைந்தேன்,
உன் கால் கொலுசில்.!
கோழையாய் அல்ல..!!
உன் மனம் கவர்ந்த வேந்தனாய்..!!!
                                                                           இப்படிக்கு,
                                                                 தன் மனதை இழந்து,
                                                         உன் மனதை ஆள்பவன்..!
                                                                                                                            (உன் காதலன்..!!)

Raja Ravi Varma's Paintings..!!! :)




Monday, October 21, 2013

மழலை :) :)













சொக்கித் தான் போனேன்,நான்..
ஏன்!



அந்த மன்மதன் கூட
மயங்கி தான் போவான்..!
மழலையின்
சிரிப்பு  அம்பில்..!





துலாபாரத்தில்,
குபேரனின் செல்வங்கள்
கூட தோல்வியுறும்..!
அந்த பொக்கை வாய்
இடுக்கில் பொதிந்த
நவரத்தினப் பல் சிரிப்புக்கு..!









உலக அழகிகள்

அனைவரும்
சேர்ந்து,அலங்கரித்து உலா வந்தாலும்...
அந்த
திக்குமுக்காடும்
பிஞ்சு கால்
நடனத்திற்கு முன் ,
தோற்று தான் போவார்கள்..!!!







பிரம்மன் உலகத்திற்கு வர,

அஞ்சுவாராம்...
ஏனெனில்,
அந்த பூப்பாதம் தொட்டு
விளையாடி,
படைக்கும் தொழிலை மறக்கும் அய்யத்தில்..!!!








தில்லை அம்பல நடராஜனின்
சிற்பத்தை தான் செதுக்கியதோ,
அந்த பிஞ்சு விரல்..?
கோவை கனி அளவு
இத்துனை நிறம் மாறி,
சிவந்து காய்க்க..
இல்லை ..! இல்லை..!
அதன் சிற்ப உதடுகளால்,
விரல் சுப்பியதன் தாக்கமாம்..!









பார்கடல் படுக்கை வெய்த்திருக்கும்,
அனந்த பெருமாள் கூட,
சுகமாய் துயில் கொண்டாரா..?
யான் அறியேன்..!
ஆனால் ,
இந்த குழந்தையின்
உறக்கத்தின்அமைதி..
ஜெகத்தைக் கொடுத்தாலும் ஈடாகா..!

























Saturday, October 12, 2013

மழை...!


    (கல்லூரி பேருந்தில் செல்லும்பொழுது பெய்த மழையும்,அதன் பின் இருந்த சூழலும்,என்னை இந்த கவிதை எழுத ஊக்குவித்தது..ஆக,
இயற்கைக்கு என் முதற்கண் நன்றிகள்..!)


வாடை காற்று கேலி செய்ததாம்,
வான நங்கை மனம் இழந்தாள்....
தங்க முகம் கருகிவிட்டாள்,அவள்...

காற்று களிப்பில் பலமானது.!

சோகம் தாங்காமல்,மேனி சிலிர்த்த
 வண்ணம்,சடாரென்று
அழுதுவிட்டாள்...  மழையாக...!

கோபத்தில் மின்னலை விட்டெறிந்தாள்,அவள்...!


அவள் கண்ணீரையும்
ரசித்து விளையாடினர்,
மானிட சிறுவர்கள்...!

வானதேவதையை ஆதரித்து,
கருப்பு குடை தூக்கினர்,
சில மானிடர்கள்...
அவள் மழை
கண்ணீரை தாங்காமல்....!

எனினும் குடைகளை பிடிக்க
இயலா வண்ணம் ,
காற்று அவர்களை தடுத்தது..!

சிலர் போராட்டத்தை கைவிடுத்து,
சாலையோர சந்தைகளில்,
தஞ்சம் அடைந்தனர்..!

நேரமும் ஒடியது....!!!!

தன்னவளை தேற்றுவதற்கு
வந்தான் சூரியன்....
தலைவன் வருகையால்,அழுகையை
துறந்தாள் வானதேவதை...

சொல்லாமலே அவள் சோகத்தை
உணர்ந்தான் கதிரவன்
அவள் மனதை புரிந்தவன் ஆயிற்றே..!


ஆதலால்,
அவள் களிப்புற,
வானவில்லை பிறையாய்,
அவள் குழலில் சூட்டினான் சூரியன்...!!!

துன்பத்தை துறந்து,
வெட்கத்தால் மறைந்து கொண்டாள் அவள்...!

வெற்றி களிப்பில்,
தன்னவளை அணைத்துக் கொண்டு,
மின்னி மகிழ்ந்தான்,சூரியன் ..!!!
(காற்றினை எச்சரித்தபடி..!)






Tuesday, October 8, 2013

என் முதல் கவிதை ....


வானம் ஆனவள் .. 
மேகம் எனும் வண்ண 
சேலை போர்த்தி தன்னை 
மறைக்க ...


அவன் தலைவன் கதிரவனோ , 
தன்  செந்நிற கதிர்களை, 
அவள்  அழகுக்கு  பரிசளித்தான் ....

அவள் வெக்கத்தால் முகம் சிவக்க ,  
இந்த பூவுலகமே செவ்வென ஆனது 
அதிகாலையில் ..!!!!! 

என் கண்களுக்கு  விருந்தாக...!!!