(கல்லூரி பேருந்தில் செல்லும்பொழுது பெய்த மழையும்,அதன் பின் இருந்த சூழலும்,என்னை இந்த கவிதை எழுத ஊக்குவித்தது..ஆக,
இயற்கைக்கு என் முதற்கண் நன்றிகள்..!)
வாடை காற்று கேலி செய்ததாம்,வான நங்கை மனம் இழந்தாள்....
தங்க முகம் கருகிவிட்டாள்,அவள்...
காற்று களிப்பில் பலமானது.!
சோகம் தாங்காமல்,மேனி சிலிர்த்த
வண்ணம்,சடாரென்று
அழுதுவிட்டாள்... மழையாக...!
கோபத்தில் மின்னலை விட்டெறிந்தாள்,அவள்...!

அவள் கண்ணீரையும்
ரசித்து விளையாடினர்,
மானிட சிறுவர்கள்...!
வானதேவதையை ஆதரித்து,
கருப்பு குடை தூக்கினர்,
சில மானிடர்கள்...
அவள் மழை
கண்ணீரை தாங்காமல்....!
எனினும் குடைகளை பிடிக்க
இயலா வண்ணம் ,
காற்று அவர்களை தடுத்தது..!
சிலர் போராட்டத்தை கைவிடுத்து,
சாலையோர சந்தைகளில்,தஞ்சம் அடைந்தனர்..!
நேரமும் ஒடியது....!!!!
தன்னவளை தேற்றுவதற்கு
வந்தான் சூரியன்....
தலைவன் வருகையால்,அழுகையை
துறந்தாள் வானதேவதை...
சொல்லாமலே அவள் சோகத்தை
உணர்ந்தான் கதிரவன்
அவள் மனதை புரிந்தவன் ஆயிற்றே..!

ஆதலால்,
அவள் களிப்புற,
வானவில்லை பிறையாய்,
அவள் குழலில் சூட்டினான் சூரியன்...!!!
துன்பத்தை துறந்து,
வெட்கத்தால் மறைந்து கொண்டாள் அவள்...!
வெற்றி களிப்பில்,
தன்னவளை அணைத்துக் கொண்டு,
மின்னி மகிழ்ந்தான்,சூரியன் ..!!!
(காற்றினை எச்சரித்தபடி..!)

woooww..... yengaiyoo poita da... grt..
ReplyDelete